#BREAKING: செலவோ ரூ.50,000.. கிடைத்ததோ 44 ஓட்டு.. விரக்தியில் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு..!
#BREAKING: செலவோ ரூ.50,000.. கிடைத்ததோ 44 ஓட்டு.. விரக்தியில் மநீம வேட்பாளர் எடுத்த முடிவு..!
திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வந்தவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில், 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். இதனால், தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
இதையடுத்து, தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் வாங்கிய கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்ற கவலையில் இருந்துள்ளார்.
இதனால், கணவன் - மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி, நேற்றிரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.