BREAKING: சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. மக்கள் பெரும் அதிர்ச்சி

BREAKING: சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. மக்கள் பெரும் அதிர்ச்சி

Update: 2022-05-19 07:08 GMT

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 7ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதில் தற்போது மேலும் மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் 965 ரூபாய்க்கு விற்பனையானது.  
 


இந்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,000ஐ தாண்டியுள்ளது. அந்தவகையில் இம்மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.3 அதிகரித்து ரூ.1018.50க்கு விற்பனையாகிறது.

இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507 என விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Similar News