#BREAKING:- இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..!!
#BREAKING:- இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..!!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்ளித்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்போது இல்லை என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் ஆவதற்கான முன்னோட்டமாக பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகிறார். அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.