BREAKING: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை !!
BREAKING: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை !!
அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் செய்து வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில், திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய 49 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in