#BREAKING:- பிரபல சிஎஸ்கே வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு..!

#BREAKING:- பிரபல சிஎஸ்கே வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு..!

Update: 2022-05-14 13:55 GMT

ஐபிஎல் 15வது சீசன் தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் புகழ் பெற்று இந்திய அணியில் இடம் பிடித்ததில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர். முதலில் மும்பை, பிறகு சென்னை என இரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு, கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுள்ளார்.

36 வயதான அம்பத்தி ராயுடு, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்நிலையில், தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ராயுடு விளையாடி வந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “13 ஆண்டுகளாக 2 பெரிய அணியில் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மும்பை அணிக்காக 2416 ரன்களும், 14 அரை சதங்கள் அடித்துள்ள ராயுடு, சிஎஸ்கே அணிக்காக 1771 ரன்களும், 1 சதமும், 8 அரை சதம் அடித்துள்ளார்.

கடந்த சில போட்டியில் அம்பத்தி ராயுடு தனது பழைய ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். வயதும் ஆவதால் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக அம்பத்தி ராயுடு விளங்கினார்.

ஐபிஎல் தொடருக்கு முன்பு கபில்தேவ் நடத்திய ஐசிஎல் டி20 தொடரில் பங்கேற்று பிசிசிஐயால் தடை பெற்ற அம்பத்தி ராயுடு, பிறகு பொது மன்னிப்பு பெற்று ஐபிஎல் தொடரில் களமிறங்கி அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர்.

இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டியில் விளையாடி 1694 ரன்களும், 6 டி20 போட்டியிலும் ராயுடு விளையாடி இருக்கிறார். இந்நிலையில், ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை அவர் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Similar News