இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பூ’. இந்த படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துக்கு தந்தையாக ராமு என்ற வீதி நாடகக் கலைஞர் நடித்திருப்பார் . அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் அதன் பிறகு அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ‘வீதி நாடகக் கலைஞர் ராமுவுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ் நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 

Tags: