#BREAKING:- டிமிக்கி கொடுத்த பிரபல நடிகை அதிரடி கைது..!

#BREAKING:- டிமிக்கி கொடுத்த பிரபல நடிகை அதிரடி கைது..!

Update: 2022-03-25 14:28 GMT

பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாடல் அழகியாக இருந்து நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் முறையாக ஆஜராகாத மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News