BREAKING: திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் மரணம் !!

BREAKING: திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் மரணம் !!

Update: 2022-07-15 10:01 GMT

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார். மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.  

நடிகர், இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பிரதாப் கே போத்தன். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர்களில் ஒருவர்.



 


1979ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், மூடு பனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே,  குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், படிக்காதவன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளையும் இவர் குவித்துள்ளார். 

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - தகர (1979)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - சாமரம் (1980)
சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது - மீண்டும் ஒரு காதல் கதை (1985)
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - ரிதுபேதம் (1987)
எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது - 22 பெண் கோட்டயம் (2012)
கேரள மாநில திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருது - (2014)

நடிகர் பிரதாப் கே போத்தன் மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in  
 

Similar News