#BREAKING: நெகிழ்ச்சி.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற ‘பறந்து வந்த’ கோவை பெண்..!

#BREAKING: நெகிழ்ச்சி.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற ‘பறந்து வந்த’ கோவை பெண்..!

Update: 2022-02-19 14:27 GMT

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (19ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர் விமானம் மூலம் கோவை வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி ரோசல். இவர், தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டனி ரோசல் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.

அதன் பின்னர், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குழந்தையுடன் சென்று, வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

உள்ளூரில் வசிப்பவர்களே தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற அலட்சியம் காட்டிவரும் நிலையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து வாக்களித்த ஆண்டனி ரோசலின் ஜனநாயக பற்று அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News