BREAKING: குரூப் தேர்வு.. 9 மணிக்கு பிறகு அனுமதி இல்லையென அறிவிப்பு
BREAKING: குரூப் தேர்வு.. 9 மணிக்கு பிறகு அனுமதி இல்லையென அறிவிப்பு
தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக சென்ற 2 ஆண்டுகளாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வு வரும் மே 21ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதன்பிறகு குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.இந்த தேர்வு வாயிலாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குரூப் தேர்வு தொடர்பாக தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வுகள் திட்டமிட்டப்படி மே 21ஆம் தேதி நடைபெறும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே வரவேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்றும், ஆனால் தேர்வு அறையில் 12.45 மணி வரை இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காலை 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
newstm.in