#BREAKING: தெலுங்கானாவில் ஹெலிகாப்டர் விபத்து.. தமிழக விமானி உட்பட 2 பேர் பலி..!

#BREAKING: தெலுங்கானாவில் ஹெலிகாப்டர் விபத்து.. தமிழக விமானி உட்பட 2 பேர் பலி..!

Update: 2022-02-26 15:10 GMT

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் விமான பயிற்சி நிலையம் ஒன்று உள்ளது.

இன்று மதியம், தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி மகிமா மற்றும் விமானி ஒருவர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றனர்.

அப்போது, துங்கதுர்தி கிராமம் அருகே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகினர்.


விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் விமான பயிற்சி நிறுவன அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்த காரணத்தால் மின்கம்பத்தில் மோதி விழுந்து நொறுங்கி பற்றி எரிந்ததாக தெரியவந்துள்ளது.

பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு விமானிகள் உடல்கருகி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News