#BREAKING:- மும்பை அருகே நடுக்கடலில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!!
#BREAKING:- மும்பை அருகே நடுக்கடலில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!!
ஒஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று 9 பேருடன் நடுக்கடலில் ஒ.என்.ஜி.சி ஆயில் எடுக்கும் இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கிரன் ஒ.என்.ஜி.சி ஆயில் தளத்துக்கு அருகே கடலில் விழுந்தது. மிதவை பொருத்தப்பட்டிருந்ததால் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தும் நீரில் மூழ்காமல் தப்பியது.
ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் 7 பயணிகளும் இருந்த நிலையில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.காயமடைந்த 4 பேர், ஜூகுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.