#BREAKING இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!!
#BREAKING இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி உலகம் முழுவதும் 50 நாடுகளில் ஜனவரி 1 முதல் ஜூன் 22ஆம் தேதி வரை 3,411 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 86% பாதிப்பு ஐரோப்பிய கண்டத்திலும், 11% பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பும் பயணிகளை விமான நிலையத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், குரங்கு அம்மை நோய் குறித்து பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மாநில சுகாதாரத் துறையை மத்திய சுகாதாரத்துறை உஷார் படுத்தியுள்ளது.
குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சோதனை முடிவில் அவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
newstm.in