#BREAKING: தொழில்துறை அமைச்சர் மாரடைப்பால் மரணம்.. முதல்வர் இரங்கல்..!
#BREAKING: தொழில்துறை அமைச்சர் மாரடைப்பால் மரணம்.. முதல்வர் இரங்கல்..!
ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 50. கவுதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் கவுதம் ரெட்டி. துபாயில் இருந்து நேற்று (20ம் தேதி) ஹைதராபாத் திரும்பிய அவருக்கு, இன்று (21ம் தேதி) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். கவுதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவுதம் ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.