BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம்.. மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள் !!
BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம்.. மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள் !!
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நான்காவது நாள் போராட்டம் இன்று தொடர்ந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டு கலவரம் உண்டானது. பள்ளி நிர்வாகத்தின் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. கல்வீசி தாக்கியதில் போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
நிலையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன், என கூறியுள்ளார்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். (2/2)
— M.K.Stalin (@mkstalin) July 17, 2022
newstm.in