#BREAKING: மண்ட முக்கியம்.. பதிவியேற்க ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்..!

#BREAKING: மண்ட முக்கியம்.. பதிவியேற்க ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்..!

Update: 2022-03-02 14:12 GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்வினை பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அப்போது, பதிவியேற்றுக்கொள்ள வந்த அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் 9 பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர். இதனால், பதவியேற்பு விழா நடைபெறும் பேரூராட்சி அலுவகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், ‘பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று  மிரட்டல் விடுத்து வந்தனர்.

மேலும், பதிவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் அதிமுகவினர் மண்டையை  உடைப்போம் என்றும் கூறினர். இதனால், பாதுகாப்பு கருதி முன்னேற்பாடாக ஹெல்மெட் அணிந்து வந்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

Similar News