#BREAKING : இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் !!
#BREAKING : இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் !!
இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் தற்போது ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி பொறியாளராக பணியாற்றிய ஒருவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடெமியில் கல்வி பயின்றவர் ஆவார். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிகோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியவர்.
newstm.in