BREAKING: 'வலிமை' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !!

BREAKING: 'வலிமை' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் !!

Update: 2022-02-01 18:16 GMT

 நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனையடுத்து பெரிய படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 


நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளன. விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் வெளியாகவிருக்கின்றன. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் எச்.வினோத் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வலிமை படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.  



 

newstm.in

Tags:    

Similar News