#BREAKING: விமானம் விபத்து.. 133 பேர் பலி..?
#BREAKING: விமானம் விபத்து.. 133 பேர் பலி..?
தென்மேற்கு சீனாவில் 133 பயணிகளை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில், 133 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சியான சிசிடிவியின் செய்தி தெரிவித்துள்ளது.
போயிங் 737 ரக விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகே உள்ள கிராமப்புறங்களில் விபத்துக்குள்ளானது என்றும், இதனால் மலைப்பகுதியில் மோதி அது பயங்கர தீயை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக சிசிடிவி செய்தி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இது குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை. விரைவில், உயிரிழப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.