#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!!
#BREAKING:- முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. 20ஆம் தேதி காலை சென்னையிலிருந்து காரில் ராணிப்பேட்டை முதல்வர் புறப்பட்டு நண்பகல் 12 மணி அளவில் ராணிப்பேட்டை -வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனை வளாகத்தை திறந்து வைப்பார் என்றும் பிற்பகல் 3 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது . 21ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதல்வர், திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவால் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்வர் அவர்கள், நாளை 20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுக்கின்றன. இவற்றிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.