#BREAKING: அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி அறிவிப்பு..!
#BREAKING: அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி அறிவிப்பு..!
இலவச அரிசி பெறாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப் போவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதத்திற்கான அரிசி புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து நகர் பகுதிகளிலும் இலவசமாக விநியோகம் நடைபெற உள்ளது.
ஆகவே, சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்கம்போல தங்கள் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமூதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை 20-3-2022 தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது.
மேலும், மேற்படி இலவச அரிசி பெறாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.