#BREAKING: மறு வாக்குப்பதிவு.. 10 மணி நிலவரம்.. பதிவான வாக்குகள்..!

#BREAKING: மறு வாக்குப்பதிவு.. 10 மணி நிலவரம்.. பதிவான வாக்குகள்..!

Update: 2022-02-21 11:33 GMT

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி (எண் 1174), 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி (எண் 5059), மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 17 டபிள்யூ), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 16 எம், 16 டபிள்யூ), திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 57 எம், 57 டபிள்யூ) என 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஜெயங்கொண்டம் வார்டு எண் 16-ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9 % வாக்கு பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை வார்டு 25 -ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 9 மணி வரை 16.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து 10 மணி நிலவரப்படி, அரியலூர் ஜெயங்கொண்டம் வார்டு எண் 16-ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 10 மணி வரை 18% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மதுரை திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17-ல் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் மறு தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலையில் காலை 10 மணி நிலவரப்படி 28.05% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் 10 மணி நிலவரப்படி 196 வாக்குகள் பதிவாகி  உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News