#BREAKING:- தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!

#BREAKING:- தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!

Update: 2022-06-11 12:40 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.வழக்கம் போல் அனைத்துப் பணிகளும் தடையின்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

இதன் மூலம் தமிழகத்தில்  முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது. 

மேலும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் 

Similar News