#BREAKING மாணவிகளுக்கு ரூ.1,000 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
#BREAKING மாணவிகளுக்கு ரூ.1,000 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில்மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக விண்ணபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் ஏற்கனவே பிற கல்வித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 10ஆம் தேதி அவகாசம் முடிந்தது.
இந்நிலையில் மொத்தமாக 3,58,304 மாணவிகள் ரூ.1000 நிதியை பெற விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் மாணவியின் பெயர் விடுபட்டால், அதற்கு சார்ந்த கல்லூரி முதல்வரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in