#BREAKING: மாணவர்களே, எந்தெந்த தேர்வு எப்போது தெரியுமா..?: இதோ முழுமையான அட்டவணை..!
#BREAKING: மாணவர்களே, எந்தெந்த தேர்வு எப்போது தெரியுமா..?: இதோ முழுமையான அட்டவணை..!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 6-ம் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 9-ம் தேதியும் தொடங்குகிறது. அத்துடன், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்குகிறது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 9-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம் 17-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூலை மாதம் 7-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு ஜூலை மாதம் 23-ம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அத்துடன், 2022 - 2023-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.