#BREAKING: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு குடோனில் திடீர் தீ.. உடல் சிதறி ஒருவர் பலி..!

#BREAKING: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு குடோனில் திடீர் தீ.. உடல் சிதறி ஒருவர் பலி..!

Update: 2022-03-14 11:52 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் க.மாமனந்தல் கிராம எல்லைப் பகுதியில், இஸ்மாயில் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இன்று காலை, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வழக்கமான பணிக்காக குடோனுக்கு சென்றுள்ளார்.

அப்போது, குடோனில் உள்ள பட்டாசுகள் எதிர்பாராவிதமாக வெடித்துச் சிதறின. இதில், அந்த கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கிய ஏழுமலை உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News