BREAKING: தமிழகத்தின் பிரபலம் ப்ரியா கல்யாணராமன் மறைவு !!

BREAKING: தமிழகத்தின் பிரபலம் ப்ரியா கல்யாணராமன் மறைவு !!

Update: 2022-06-22 16:49 GMT

பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் சற்றுமுன் காலமானார். 30 ஆண்டுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் காலமான செய்தியை குமுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இவர் ஆன்மீக தொடர்பான அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன் என்கிற பிரகாஷ். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ப்ரியா கல்யாணராமன் இன்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள். அவரது மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in
 

Similar News