#BREAKING:- தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

#BREAKING:- தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

Update: 2022-04-30 20:10 GMT

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேலும், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News