#BREAKING:- நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் நடைமுறை அமல்..!!
#BREAKING:- நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் நடைமுறை அமல்..!!
மது பிரியர்கள் மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் கருத்து எழுந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை நீலகிரியில் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கல் - கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும்.
பின்னர் காலி பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து ரூ.10ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.