#BREAKING: வாக்குப்பதிவு தொடங்கியது- நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள் !!

#BREAKING: வாக்குப்பதிவு தொடங்கியது- நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள் !!

Update: 2022-02-19 07:00 GMT

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வாக்காளர்கள் 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்க வேண்டும், வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் உரிய டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இவர்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் முடிவடைந்து, வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் நான்காம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

newstm.in

Similar News