#BREAKING வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. குவியும் நடிகர், நடிகைகள் !!

#BREAKING வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. குவியும் நடிகர், நடிகைகள் !!

Update: 2022-03-20 08:00 GMT

நடிகா் சங்கத் தோ்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. 

தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோ்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசா் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனா். ஆனால் தோ்தலை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் செல்லாது என அறிவித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தாா். இதைத் தொடா்ந்து இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

தோ்தல் செல்லாது என்ற தீா்ப்பை எதிா்த்து நாசா், விஷால், காா்த்தி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்தனா். இதனை எதிா்த்து நடிகா் ஏழுமலை என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திரைத்துறையினரும் குவிந்துள்ளனர்.

  
newstm.in

Tags:    

Similar News