#BUDGET: பட்ஜெட் உரை தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

#BUDGET: பட்ஜெட் உரை தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Update: 2022-03-18 10:13 GMT

தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தையதை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்தபோதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  அப்போது, அதிமுகவினர் கருத்துகள் எதுவும் அவைக்குறிப்பில் சேர்க்கப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். பட்ஜெட் உரையை கேட்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார். 

எனினும் ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான உரையை வாசித்து வருகிறார். சில நிமிடங்களில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

newstm.in

Similar News