#BUDGET: வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

#BUDGET: வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

Update: 2022-03-18 10:52 GMT

தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையில் சில அறிவிப்புகள் பின்வருமாறு...

  • கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.
  • நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது.
  • தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%-ல் இருந்து 3.08%ஆக குறையும்.

  • தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.
  • தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.
  • உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்

newstm.in

Similar News