பப்ஜி மதனுக்கு விரைவில் ஜாமீன்..?

பப்ஜி மதனுக்கு விரைவில் ஜாமீன்..?

Update: 2022-05-11 17:31 GMT

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் மீதான வழக்கில் கூறப்பட்டுள்ள சில சட்டப் பிரிவுகள் இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும், கடந்த 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

Similar News