நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை.. பாட்டி, கள்ளக்காதலன் கைது..!

நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை.. பாட்டி, கள்ளக்காதலன் கைது..!

Update: 2022-03-11 05:15 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பினாய் டி குரூஸ் (28). இவர், எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கோடசேரி பகுதியைச் சேர்ந்த ஜிப்ஸி (52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஜிப்ஸியின் மகன் சஜீவ்-க்கும், அவருடைய மனைவி டிக்ஸி-க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர்.

டிக்ஸி, தனது குழந்தைகளின் நலன் கருதி துபாய்க்கு வேலைக்கு சென்று உள்ளார். இதனால், தனது 2 குழந்தைகளையும் மாமியார் ஜிப்ஸியின் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜிப்ஸி, குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். நேற்று, தனது கள்ளக்காதலன் ஜான் பினாய் டி குரூஸ் பொறுப்பில் 2 குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு ஜிப்ஸி வெளியே சென்றுள்ளார்.


அப்போது குழந்தை மலம் கழித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  ஜான் பினாய், கழிவறையில் உள்ள பக்கெட்டில் இருந்த நீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், இந்த தகவலை ஜிப்ஸியிடம் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த ஜிப்ஸி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

அங்கு, பால் குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அறிந்த போலீசார் குழந்தையின் உயிரிழப்பு குறித்து சிப்சியிடம் விசாரணை நடத்தியபோது, தனது கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News