தங்கம் வாங்குவோருக்கு இன்று கெட்ட செய்தி.. சவரனுக்கு ரூ.320 உயர்வு..!
தங்கம் வாங்குவோருக்கு இன்று கெட்ட செய்தி.. சவரனுக்கு ரூ.320 உயர்வு..!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதையடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபடியே வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று (13-ம் தேதி) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,987 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (12-ம் தேதி) இதன் விலை 4,947 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 320 ரூபாய் உயர்ந்து 39,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (12-ம் தேதி) 5,346 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,386 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல, நேற்று 42,768 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 43,088 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதுபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.72.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.73.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 73,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.