பறிமுதல் செய்த கள்ள நோட்டுகளை பதுக்கிய ‘பலே’ போலீஸ்!

பறிமுதல் செய்த கள்ள நோட்டுகளை பதுக்கிய ‘பலே’ போலீஸ்!

Update: 2022-05-26 19:55 GMT

மதுரையில் கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போது திருமங்கலம் புறநகர் காவல் நிலைய தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்த் என்பவர், கடந்த 2020இல் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் அவ்வழியே வந்த 2 கார்களை சோதனை செய்ததில், அதில் 3 மூட்டைகளில் கள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மூட்டையில் 100 ரூபாய் நோட்டுக்களும், மற்றொரு மூட்டையில் 500 ரூபாய் நோட்டுகளும் ,மற்றொரு மூட்டையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும் சுமார் 80 லட்சம் ரூபாய்க்காண கள்ள நோட்டுகள் இருந்தது.

கடத்தலில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை.

2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆனந்த் தனக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க்கிடம் ரகசிய புகார் சென்றது.

இதனையடுத்து கள்ளிக்குடியில் உள்ள தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளர் ஆனந்திற்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது  இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Similar News