இன்று நள்ளிரவு முதல் தடை..!

இன்று நள்ளிரவு முதல் தடை..!

Update: 2022-04-14 16:30 GMT

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம், இன்று நள்ளிரவு (14ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே மாதங்களில் கடலில் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால், மீன் வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (14-ம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்.

இந்த மீன்பிடி தடைக்காலம் காரணமாக, மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை வர்ணம் பூசி, பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடுவர். அத்துடன், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இதனால் மீனவர்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும். இதனால், இந்த காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு ஒவ்வொரு மீனவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News