FIR படத்துக்கு தடை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!!

FIR படத்துக்கு தடை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்!!

Update: 2022-02-11 08:37 GMT

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்..ஆர்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவர் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இந்நிலையில் 'எப்..ஆர்படம் மலேசியா, குவைத், மற்றும் கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் விஷ்ணு விஷால்.


'எப்..ஆர்தீவிரவாத பின்னணியில் உருவாகியிருப்பதால் மேற்கண்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் மற்ற நாடுகளில் திட்டமிட்டப்படி இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் பிரம்மாண்டமாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News