இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

Update: 2022-04-04 07:00 GMT

இலங்கையில் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பால்  சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்கள், அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்கள் நாடு முழுவதும் பரவும் என்று அச்சமடைந்த இலங்கை அரசு, போராட்டங்களை ஒடுக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களை முடக்கியது.

வாட்ஸ் அப் உள்ளிட்டவையும் செயல்படாததால், இலங்கை மக்கள் கடும் அச்சமடைந்தர். கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் மற்றும் ராணுவத்தினர், ஊரடங்கை மீறியதாக 600க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

சாலைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி யாரும் நடமாடக் கூடாது என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டதற்கு தெரிவித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் ஓஷத சேனாநாயக்க, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சே, சமூக வலைதளங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் முற்போக்காக சிந்திந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News