10 மாவட்டங்களில் வங்கிக் கணக்குகள் முடக்கம்..!

10 மாவட்டங்களில் வங்கிக் கணக்குகள் முடக்கம்..!

Update: 2022-05-30 16:44 GMT

தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 90 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விருதுநகரில் 76 கஞ்சா வழக்கில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 கஞ்சா வழக்கில் 116 வங்கி கணக்குகளும், தேனியில் 81 கஞ்சா வழக்குகளில் 146 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கி கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், குமரியில் 59 வழக்குகளில் 91 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல், விற்பனைக்கு கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்கும் முடக்கப்படும்” ” எனத் தெரிவித்தார்.

Similar News