வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!!

Update: 2022-06-09 14:31 GMT

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகிற 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்கள் ,தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 27ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் ஆகிய சங்கங்கள் பங்கேற்க உள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இதனால் வருகிற 27ஆம் தேதி வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News