பிளஸ் 2 படித்தவர்களுக்கு வங்கி வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி..!
பிளஸ் 2 படித்தவர்களுக்கு வங்கி வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி..!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள பியூன் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான pnbindia.in மூலம் மேலும் விவரங்களை பார்வையிடலாம்.
அத்துடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கி, தேவையான ஆவணங்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்புவதன் மூலம் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28 மார்ச் 2022 ஆகும்.
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் மொத்தம் 36 காலிப்பணியிடம் நிரப்பப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரருக்கு ஆங்கில மொழி (அடிப்படை) படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டதாரி விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதாக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்ப படிவத்தை ‘Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan - 713103" என்ற முகவரிக்கு இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாத சம்பளமாக ரூ.14,500 முதல் ரூ.28,145 வரை வழங்கப்படும்.