நடிகர் சிலம்பரசன் தொடர் தோல்வி, சிறிது காலம் இடைவெளிக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தியுள்ளார். அண்மையில் வெளிவந்த மாநாடு படம் அவருக்கு திரும்புமுனையை கொடுத்தது.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசனின் அடுத்தப் படம் ‘மஹா’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. க்ரைம் திரில்லர் படமான ‘மஹா’ படத்தில் ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் சிலம்பரசன் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதனால் நடிகர் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் பேனர் அடித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் சிம்புவுக்கு 1000 அடியில் பேனர் வைக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த பேனர் அகற்றப்பட்டது.

அதாவது மதுரை நகரில் உள்ள மேம்பாலத்தில் இந்த பேனர்  1000 அடி நீளத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் உரிய அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் 1000 அடி பேனரை அகற்றினர். 

படத்தில் ஹன்சிகா மோத்வானியின் காதலனாக சிலம்பரசன் நடித்துள்ளார். காதலில் இருந்த சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்த பிறகு, 'மஹா' படத்திற்காக மீண்டும் இணைந்தனர். ரசிகர்கள் அவர்களை மீண்டும் திரையில் ஒன்றாகப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


newstm.in
 

Tags: