நாய் குரைத்ததால் உரிமையாளர் மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்!! VIDEO

நாய் குரைத்ததால் உரிமையாளர் மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்!! VIDEO

Update: 2022-07-05 06:15 GMT

நாய் தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் நாயின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பஸ்சிம் விஹார் என்ற பகுதியில் ரக்ஷித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தரம்வீர் தஹியா என்பவர் அதிகாலையில் அந்த பகுதி வழியாக சென்றுள்ளார்.

அப்போது ரக்ஷித் வளர்க்கும் நாய், தரம்வீர் தஹியாவை பார்த்து குரைத்துள்ளது. நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஆத்திரம் அடைந்த ரக்ஷித் நாயின் வாலைப் பிடித்துத் தள்ளி அதை அடித்துள்ளார்.


தனது வளர்ப்பு நாயை பக்கத்து வீட்டுகாரர் அடித்ததை பார்த்த ரக்ஷித் அதை தடுக்க வந்துள்ளார். இதனால் இருவரும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தரம்வீர் தஹியா, ரக்ஷித்தையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கம்பியால் தாக்கினார்.

அதை தடுக்க வந்த அண்டை வீட்டுக்காரரான 53 வயதுடைய நபரையும் தாக்கினார். இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News