விழிப்போடு இருங்க.. திருமணம் செய்யாதீங்க.. அமைச்சர் அதிரடி..!

விழிப்போடு இருங்க.. திருமணம் செய்யாதீங்க.. அமைச்சர் அதிரடி..!

Update: 2022-07-11 18:34 GMT

“எங்கள் கண்கள் சிறியதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்” என, வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் குறித்து பேசி சமீபத்தில் இணையத்தில் பிரபலமானவர் நாகாலாந்து அமைச்சர் டெம் ஜென் இம்னா அலோங்.

இந்த நிலையில், உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி மக்கள் தொகை பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து டெம் ஜென் இம்னா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம்.

அல்லது, என்னைப் போல் சிங்கிளாக இருங்கள். அப்போது நாம் ஒன்றாக ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே ‘சிங்கிள்’ இயக்கத்தில் சேருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யாமல் இருங்கள் என்பதையே அவர் ‘சிங்கிளாக இருங்கள்’ என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News