“மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” : நடிகர் சூர்யா அதிரடி!!

“மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” : நடிகர் சூர்யா அதிரடி!!

Update: 2022-03-03 07:00 GMT

ரசிகர்கள் அனைவரும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென நடிகர் சூர்யா வலியுறுத்தி உள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளம் உள்ளது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்வோம் என்றார். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஜெய்பீம் படம் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது, அதை சரிப்படுத்த முயன்றோம். மீண்டும் சொல்கிறேன் ரசிகர்களாகிய நீங்கள் தான் எதற்கும் துணிந்தவர்கள் எனவே மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென சூர்யா அழுத்தமாக கூறினார்.

newstm.in

Similar News