மக்களே தயாரா இருங்க.. வரும் 1-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு..!

மக்களே தயாரா இருங்க.. வரும் 1-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு..!

Update: 2022-07-14 05:40 GMT

வாக்காளர் பட்டியல் சரியான தகவல்களுடன் இல்லாமல் ஒரே வாக்காளர் பெயர் மீண்டும் இடம்பெறுவது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன.

குறிப்பாக, பின்னலாடை நகரமான திருப்பூரில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊரிலும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.

இதுபோல் மாநகரை ஒட்டிய பல்லடம் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலை உள்ளது. வாக்காளர்கள் இங்கு இல்லையென்றால் சொந்த ஊரில் வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால் வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்பதிவு சதவீதம் என்பது 70 சதவீதத்தை தாண்டாமல் இருக்கிறது.

பொதுவினியோக திட்டத்தில் ஆதார் விவரத்தை இணைத்த பிறகு போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. இதனால், ஒருவர் ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது.

அதேபோல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, மாவட்டம் வாரியாக பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 1-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்கும் பணி தொடங்க இருக்கிறது.

வாக்காளர் ஆன்லைன் மூலமாக தங்களது விவரத்தை இணைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக படிவம்-6 பி உருவாக்கப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியும், ஆதார் விவரத்தை இணைத்துக்கொள்ளலாம். இந்த பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இதுதவிர, கருடா, nvsp, voterhelpline போன்ற செயலி மூலமாக வாக்காளரே பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 22-ம் தேதி வரை தொடர்ச்சியாக முகாம் நடத்தப்படும்.

அதற்கு பிறகு மாவட்ட நிர்வாகம், வாக்காளர் வசதிக்காக தெளிவான அறிவிப்புகளை வெளியிடும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News