பாலியல் உறவின்போது விழிப்புடன் இருங்கள்.. சுகாதாரத்துறை அட்வைஸ்..!
பாலியல் உறவின்போது விழிப்புடன் இருங்கள்.. சுகாதாரத்துறை அட்வைஸ்..!
குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரிட்டன் குடிமக்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பான, பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, இந்த நோய் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாலினம் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு அதிகமாக பரவுகிறது.
இதுவரை 96 சதவீதம் நோய் பாதிப்பு, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடமே கண்டறியப்பட்டுள்ளது. இதில், சராசரியாக 37 வயது பருவத்தினரே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உங்களுக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், பொதுநிகழ்வுகளுக்குச் செல்லவோ, நண்பர்களைச் சந்திக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ வேண்டாம்.
மாறாக, வீட்டிலேயே இருங்கள். புதிய அல்லது பல பேருடன் பாலியல் உறவு கொள்ளும் போது விழிப்புடன் இருங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில், குரங்கு அம்மை பாதிப்புக்கு உள்ளானவர்களில் 79 சதவீதம் பேர் லண்டனில் வசிப்பவர்கள் என்றும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்புகளில் 99 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 5 பேர் மட்டுமே பெண் நோயாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.