பீஸ்ட்: 39 இடங்களில் கட், 6 இடங்களில் மியூட் செய்ய தணிக்கைக் குழு உத்தரவு !!

பீஸ்ட்: 39 இடங்களில் கட், 6 இடங்களில் மியூட் செய்ய தணிக்கைக் குழு உத்தரவு !!

Update: 2022-04-09 07:28 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா மற்றும் மூன்றாவதாக தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப்பில் சாதனையும் படைத்தது . 

பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது என்று படத்தின் நீளத்துக்கான நேரத்தையும் தணிக்கை குழு வெளியிட்டு உள்ளது. பீஸ்ட் படம் தணிக்கையான விவரம் அறிந்து சான்றிதழை ரசிகர்கள் ஒரே நேரத்தில் தேடியதால் இணைய தளமே திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தை பார்த்த தனிக்கைக்குழு 39 இடங்களில் கட் மற்றும் திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. படத்தில் 8 இடங்களில் அதீத வன்முறை காட்சிகள் உள்ளதாகவும், 6 இடங்களில் ஆபாச வார்த்தைகள் உள்ளதால் மியூட் செய்யுமாறும் தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பல முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

Tags:    

Similar News